செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 31 ஆகஸ்ட் 2022 (16:43 IST)

அன்னா ஹசாராவை பாஜக தூண்டி விடுகிறது: அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

kejriwal
சமூக சேவகர் அன்னா ஹசாரேவை பாரதிய ஜனதா கட்சியை தூண்டி விடுகிறது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்
 
கடந்த சில நாட்களாக சமூக சேவகர் அன்னா ஹசாரே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். லோக்பால் போன்ற சட்டங்களை அவர் கண்டு கொள்வதில்லை என குற்றம் சாட்டியிருந்தார்
 
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி அன்னா ஹசாராவை தூண்டி விடுவதாகவும் சிபிஐ சோதனையில் எதுவும் கிடைக்காததால் பாரதிய ஜனதா அவரை பயன்படுத்துவதாகவும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார் 
 
புதிய மதுபானக் கொள்கையில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என்பது சிபிஐக்கு நன்றாக தெரியும் என்றும், மக்கள் பாஜகவை நம்பவில்லை என்றும் பிரபலமான ஒருவரை வைத்து தனி நபர் தாக்குதல் நடத்துவது என்பது பாரதிய ஜனதாவுக்கு இயல்பான ஒன்றுதான் என்றும் அதனால்தான் அக்கட்சி அன்னா ஹசாராவை வைத்து அரசியல் செய்கிறது என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்