2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு: ராமநாதபுரம் கலெக்டர் உத்தரவு!
ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்டத்தின் கலெக்டர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11ம் தேதி இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும். அந்த நிகழ்ச்சியின்போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்படுவது வழக்கம்
இந்த நிலையில் இந்த ஆண்டு இமானுவேல் சேகரன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பொதுமக்கள் வழிபட அனுமதி இல்லை என்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் அவரவருக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தில் கூட்டம் கூடாமல் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்
மேலும் ஜாதி மதம் சம்பந்தமான எந்த விதமான போஸ்டர்கள் பேனர்கள் ஒட்டக் கூடாது என்றும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது என்றும் இரண்டு மாதங்கள் 144 தடை விதிக்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்