1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (08:38 IST)

கோவையில் புதிய கட்டுப்பாடுகள்: கலெக்டர் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வந்தாலும் கோவையில் சற்று அதிகரித்து வருவதையடுத்து அங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது 
 
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் உள்ள நகைக் கடைகள், துணிக்கடைகள் சனி ஞாயிறு இயங்க தடை என்றும், பூங்காக்கள் மற்றும் மால்கள் சனி ஞாயிறு அன்று மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
கோவையில் உள்ள அனைத்து கடைகளும் இரவு 10 மணிக்குள் மூடவேண்டும் என்றும் இரவு 8 மணிக்கே வாடிக்கையாளர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கலெக்டர் அறிவித்துள்ளார்.மேலும் கோவையில் உள்ள அனைத்து உணவகங்களும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்கள் வழங்கலாம் என்றும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சலுக்கு மட்டும் அனுமதி என்றும் கலெக்டர் அறிவித்துள்ளார் 
 
அதேபோல் கோவையில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளில் சுழற்சி முறையில் இயங்க அனுமதி என்றும் உழவர் சந்தை தவிர பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்பட அனைத்து சந்தைகளும் இயங்க தடை என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்