1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : வியாழன், 9 ஜனவரி 2020 (16:09 IST)

படகு கவிழ்த்து விபத்து... கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு !

நடுக்கடலில்  நாட்டுப்படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால், நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்களை, மீட்ட மீனவர்கள் அவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டிணத்தைச் சேர்ந்த இசக்கிராஜா, ராஜ், சூசை, சுலுவை மகன் ராஜ், இளங்கோ, டோமினிக் ஆகிய 6 பேர் மீன் பிடிப்பதற்க்காக நேற்று முன்தினம் கடலுக்குள் சென்றனர்.
 
நேற்று காலையில்  சுமார் 41 மைல் தொலையில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, படகு தண்ணிருக்குள் மூழ்கியது. 
 
அப்போது, கடலில் மிதந்த மரக்கட்டையைப் பிடித்துக் கொண்டிருந்தனர்.
 
அந்த சமயம் புன்னைக் காயல் பகுதியைச் சேர்ந்தவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றபோது, மீனவர்கள் 6 பேர் தத்தளிப்பதை பார்த்து அவர்களை மீட்டு தங்கள் படகில் அழைத்து வந்தனர்.
 
இந்நிலையில், மீட்கப்பட்ட 6 பேருக்கும் தற்போது தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.