1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 5 மார்ச் 2020 (11:55 IST)

மாடியில் வைத்து மாணவியின் கழுத்தை அறுத்த இளைஞர்: ஒரு தலை காதல் விபரீதம்!

காதலிக்க மறுத்த 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியின் கழுத்தை இளைஞர் ஒரு அறுத்து கொலை முயற்சியில் ஈடுப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை அமைந்தகரை பகுதியில் வசித்து வரும் 8 வகுப்பு மாணவி பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் மாடியில் இருந்துள்ளார். அப்போது மாணவியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனே விரைந்த பெற்றோர் மாணவி இளைஞர் ஒருவரால் கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ந்துள்ளனர். 
 
அந்த இளைஞர் தப்பியோடிய நிலையில் மாணவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்தத அவர்கள் முதற்கட்ட விசாரணையில் ஒரு தலை காதலால் ஏற்பட்ட விபரீதம் இது என அறிந்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய அந்த இளைஞரை பிடித்து தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர்.