வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (17:25 IST)

'ஜெயிலர்' படக்குழுவினர் வெற்றிக் கொண்டாட்டம்....

ஜெயிலர் படக்குழுவினர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி  நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில்  நெல்சன் இயக்கத்தில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான படம் ஜெயிலர். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

அத்துடன் வசூல் சாதனையும் படைத்து வருகிறது.  ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த வாரம் வியாழன் அன்று வெளியான நிலையில் ஒரு வாரம் வசூல் குறித்த நிலவரத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

அதன்படி,  ஒரு வாரத்தில் 375.40 கோடி ரூபாய் வசூல் செய்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று ஜெயிலர் படக்குழுவினர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில், இயக்குனர் நெல்சன், வசந்த் ரவி, மிர்ணா மேனன், சுனில் வர்மா, விஜய் கார்த்திக் கண்ணன், எடிட்டர் நிர்மல், ஸ்டண்ட் சிவா, கிங்ஸ்லி உள்ளிட்ட படக்குழுவினர் இந்த ஜெயிலர் பட வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் பட ரிலீஸுக்கு முன்பே இமயமலைக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.