1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 12 arrested in connection with Thiruporur Incident

திருப்போரூர் துப்பாக்கிச்சூடு: திமுக தரப்பில் 11 பேர் கைது!

Thiruporur Incident
திருப்போரூர் அருகே துப்பாக்கிச்சூடு நடைபெற்ற விவகாரத்தில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாமல்லபுரம் ஏஎஸ்பி தகவல் வெளியிட்டுள்ளார். 
 
சொத்து பிரச்சனை குறித்த தகராறு ஒன்றில் திருப்போரூர் எம்.எல்.ஏ இதயவர்மன் துப்பாக்கி சூடு நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சென்னை போலீசாருடன் இணைந்து செங்கல்பட்டு மாவட்ட போலீசார்  இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர். 
 
தேடப்படும் எம்.எல்.ஏ இதயவர்மனின் கார், மேடவாக்கம் அருகே கண்டுபிடிப்பு என போலீசார் தகவல் தெரிவித்த நிலையில் நேற்று சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வைத்து, தனிப்படை போலீசாரால் திமுக எம்எல்ஏ இதயவர்மன் கைது செய்யப்பட்டார்.  
 
இந்நிலையில் இந்த திருப்போரூர் அருகே துப்பாக்கிச் சூடு நடைபெற்ற விவகாரத்தில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாமல்லபுரம் ஏஎஸ்பி  சுந்தர வதனம் தெரிவித்துள்ளார். அதாவது திமுக எம்.எல்.ஏ தரப்பில் 11 பேரும், அவருக்கு எதிராக புகார் கொடுத்தவர் தரப்பில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
பப்ஜியை ஒன்னும் பண்ணிடாதீங்க! அமைச்சர் பதிலால் அலறும் கேமர்ஸ்!