தங்கக்கடத்தல் ஸ்வப்னா பெங்களூரில் கைது: பெரும் பரபரப்பு

தங்கக்கடத்தல் ஸ்வப்னா பெங்களூரில் கைது
Last Updated: ஞாயிறு, 12 ஜூலை 2020 (07:38 IST)
தங்கக்கடத்தல் ஸ்வப்னா பெங்களூரில் கைது
கேரள அரசியலில் பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய தங்க கடத்தல் விவகாரத்தில் ஈடுபட்டிருந்த ஸ்வப்னா நேற்று பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் ஏற்படுத்தியுள்ளது

கேரளாவில் தங்க கடத்தல் விவகாரம் தற்போது பூதாகரமாகி வருகிறது. திருவனந்தபுரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் சோதனை செய்தபோது 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்தனர் என்பதும், இந்த கடத்தலுக்கு முதல்வர் பினராய் விஜயனுக்கு நெருக்கமான தொடர்பில் இருக்கும் ஸ்வப்னாவுக்கு தொடர்பு உண்டு என்றும் கூறப்பட்டது
இதனை அடுத்து ஸ்வப்னா தலைமறைவாகியதால் அவரை பிடிப்பதற்காக தேசிய பாதுகாப்பு முகமை தீவிர முயற்சியில் இருந்ததாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் ஸ்வப்னா தமிழகத்திற்கு தப்பியதாக கூறப்பட்ட நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தங்க கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா தேசிய புலனாய்வு ஆணையத்தின் அதிகாரிகளால் பெங்களூரில் கைது செய்யப்பட்டார்
ஸ்வப்னாவுடன் சந்தீப் என்பவரும் அவருடைய நண்பரும் கைதுசெய்யப்பட்டதாகவும், மூவரும் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அதன்பின் கேரளாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளனஇதில் மேலும் படிக்கவும் :