திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 20 ஜூன் 2023 (17:44 IST)

11ம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் எப்போது? தேர்வுத்துறையின் முக்கிய அறிவிப்பு..!

11ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் மறு கூட்டல் முடிவுகள் நாளை வெளியாகும் என தேர்வு துறை அறிவித்துள்ளது.
 
11ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியான நிலையில் இந்த தேர்வு எழுதியவர்களில் மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 11ம் வகுப்பு மறு கூட்டல் மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் மாணவர்கள் காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
 
Edited by Siva