வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 19 மே 2023 (14:59 IST)

10, 11ம் வகுப்பு தேர்வு மறுகூட்டல், துணைத்தேர்வு விண்ணப்ப தேதி அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மறுகூட்டல் மற்றும் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் துணைத்தேர்வுக்கு மே 23ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மே 24 முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் 10 மற்றும் 11ம் வகுப்பு இரு வகுப்பு மாணவர்களும் தங்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியலை மே 26ம் தேதி முதல் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இருந்து பதிவிறக்கி கொள்ளலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Edit by Prasanth.K