1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 8 பிப்ரவரி 2023 (17:19 IST)

லக்னோ பெயர் விரைவில் மாற்றம்: உத்தர பிரதேச துணை முதல்-மந்திரி அறிவிப்பு

lucknow
லட்சுமண் நகரி என பெயர் மாற்றம் செய்யப்படும் முக்கிய நகரம்: துணை முதல்வர் அறிவிப்பு!
லட்சுமண் நகரி என பெயர் மாற்றம் செய்யப்படும் முக்கிய நகரம்: துணை முதல்வர் அறிவிப்பு!
 
 உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த லக்னோ என்ற நகரம் லட்சுமணன் நகரி என விரைவில் பெயர் மாற்றம் செய்யப்படும் என அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் இன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சிலையை திறந்து வைத்தார். அதன் பின் அவர் பேசிய போது லக்னோ பெயரை மாற்ற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி வலியுறுத்தப்பட்டிருப்பதாகவும் லக்னோ என்பது லட்சுமணனின் நகரம் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் அதனால் விரைவில் பெயர் மாற்றம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். 
 
லட்சுமண் நகரி என்ற லக்னோ நகரம் பெயர் மாற்றம் செய்வதற்கான சூழல் குறித்து ஆய்வு செய்து அடுத்த நடவடிக்கையை அரசு எடுக்கும் என்று அவர் தெரிவித்தார். எனவே விரைவில் லக்னோ நகரம் லட்சுமண நகரி என்று அழைக்கப்படும் என தெரிகிறது.
 
Edited by Mahendran