1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Name change within one week says north korea president

ஒரு வாரத்தில் பெயரை மாற்ற வேண்டும்; பொதுமக்களுக்கு வடகொரிய அதிபர் உத்தரவு..!

North Korea
தனது மகளின் பெயரை வேறு யாரும் வைத்திருக்கக் கூடாது என்றும் இதுவரை வைத்திருந்தால் அந்த பெயரை ஒரு வாரத்தில் மாற்ற வேண்டும் என்றும் வடகொரிய அதிபர்  உத்தரவிட்டுள்ளார். 
 
வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் அவர்களின் மகள் ஜூ ஏ என்ற பெயரால்  அழைக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் தனது மகளின் பெயர் வேறு எந்த பெண்ணிற்கும் வைக்க கூடாது என்றும் அந்த பெயர் கொண்டவர்கள் ஒரு வாரத்தில் பெயரை மாற்ற வேண்டும் என்றும் வடகொரியா அரசு உத்தரவிட்டுள்ளது. 
 
ஏற்கனவே அந்நாட்டின் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை பெயரை வைத்துக்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வடகொரியா அதிபரின் மகளின் பெயரில் யாரும் இருக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
60 மணி நேரம் நடந்த சோதனை நிறைவு.. பிபிசி அலுவலகத்தில் ஆவணங்கள் சிக்கியதா?