1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 17 டிசம்பர் 2021 (08:55 IST)

சாக்கு மூட்டையில் 10ம் வகுப்பு மாணவியின் சடலம்: கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

கோவையில் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவரின் சடலம் சாக்கு மூட்டைகளில் இருந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் கோவை பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கோவையை சேர்ந்த சரவணம்பட்டி என்ற பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் திடீரென காணாமல் போன நிலையில் அவர் கை கால்கள் கட்டப்பட்டு சாக்குமூட்டையில் சடலமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த விவகாரம் குறித்து சரவணம்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் பணம் நகைக்காக கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் மாணவி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டரா? என்பது பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என்று கூறப்படுகிறது 
 
பத்தாம் வகுப்பு மாணவி சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என காவல்துறைக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்