1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 8 டிசம்பர் 2023 (18:21 IST)

கெட்டுப்போன ஆவின் பால்.. 1000 லிட்டர் பால் திருப்பி அனுப்பப்பட்டதால் பரபரப்பு..!

aavin
ஆவின் பால் கெட்டு போனதாக வாடிக்கையாளர்களிடமிருந்து புகார் வந்துள்ளதை அடுத்து ஆயிரம் லிட்டர் பால் திருப்பி அனுப்பப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஆவின் முகவர்கள் பால் பாக்கெட்டுகளை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை திருப்பத்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பால் பாக்கெட் களின் நிறம் வேறு மாதிரியாக இருந்ததால் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தார்.

முகவர்களும் அதனை கவனித்து உடனடியாக ஆவின் பால் பாக்கெட்டுகளை அப்படியே ஆவின் நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பினர். இதனால் திருப்பத்தூரில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதுகுறித்து ஆவின் அதிகாரி தெரிவித்த போது பால் கெட்டுப் போகவில்லை என்றும் கொழுப்பு திரண்டு இருந்ததை தவறாக நினைத்துக் கொண்டு திருப்பி அனுப்பி உள்ளனர் என்றும் ஆனால் அதே நேரத்தில் வேறு பால் பாக்கெட்டுகளை வாங்கிக் கொள்ள முகவர்களிடம் தெரிவித்துள்ளோம் என்றும் கூறினார்.

Edited by Siva