வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 6 டிசம்பர் 2023 (19:10 IST)

மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

udhayanithi
சென்னை, சேப்பாக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரிசி, பால், உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கினார்.

மிக்ஜாம் புயல் மற்றும் 47 ஆண்டுகளில் இல்லாத அதிகனமழையால் ஒட்டுமொத்த சென்னையும் ஸ்தமித்துள்ளது.  இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

சென்னையில் காரைப்பாக்கம், பெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை  பாதுகாப்பு படை வீரர்கள், போலீஸார் படகுகள் மூலம் பத்திரமீட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அத்தியாசிய தேவைகளை அரசு, தன்னார்வலர்களும் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை, சேப்பாக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரிசி, பால், உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கினார்.

இந்த நிலையில், மக்களை மீட்பது - நிவாரண பொருட்களை முழு வீச்சில் கொண்டு சேர்ப்பது தொடர்பான உயர் நிலை ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலகத்தில் இன்று கலந்து கொண்டோம் என்று அமைச்சர் உதய நிதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

‘’மிக்ஜாம் புயல் - வரலாறு காணாத கனமழையால் சென்னை - காஞ்சிபுரம் - செங்கல்பட்டு - திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்பது - நிவாரண பொருட்களை முழு வீச்சில் கொண்டு சேர்ப்பது தொடர்பான உயர் நிலை ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலகத்தில் இன்று கலந்து கொண்டோம்.

அந்தந்தப் பகுதிகளில் மீட்பு & நிவாரண உதவிகளை ஒருங்கிணைத்து வரும் அமைச்சர் பெருமக்கள் - அதிகாரிகளிடம், தற்போதைய நிலவரத்தை காணொளி காட்சி வாயிலாக கேட்டறிந்தோம். மேலும், நிவாரணங்களை முறையாக வழங்கவும் - தண்ணீர் வடிவதற்கான பணிகளை கூடுதல் எந்திரங்கள் மற்றும் பணியாட்களை வைத்து மேற்கொள்ளவும் வலியுறுத்தினோம்’’ என்று தெரிவித்துள்ளார்.