திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (23:34 IST)

100 நாள் சாதனை.... மு.க.ஸ்டாலின் அரசு... ஸ்டிக்கர் ஒட்டும் பணிதுவக்கம்!

கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் கண் துடைப்பிற்கு கூட கபசுர குடிநீர் கிடையாது, வெப்பமாணி கொண்டு சோதிப்பது இல்லை ?
 
டெங்கு காய்ச்சல் வந்து ஒரு 2 ம் வகுப்பு பயிலும் சிறுமி பலி கண்டுகொள்ளாத நகராட்சி என்றதோடு, கரூர் நகரில் உள்ள மதுபானக்கடைகளில் திறந்த வெளியில் மதுக்கள் அருந்தும் குடிமகன்கள் என்றும், வீடுதேடி வரும் மருத்துவத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி கிடையாது என்று 100 நாள் சாதனை பத்திரிக்கையாளர் சந்திப்பு கூட்டத்தில் கரூர் மாவட்ட ஆட்சியரை அடுக்கடுக்கான கேள்விக்கணைகள் அனைத்தையும் சரி செய்து விடுவதாக மாவட்ட ஆட்சியர் மலுப்பல் பேட்டி ? 
 
வீடுதேடி சென்று தடுப்பூசி என்கின்ற திட்டம் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு மட்டுமே செல்லும் என்றதோடு, கரூருக்கு வரவேண்டுமென்றால் அது சிக்கல் உள்ளது ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின் படி தான் என்றும் பேட்டி 
 
வீடுதேடி வரும் மருத்துவத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி என்பது ஒன்றிய அரசு தலையீடு விவகாரமாம் ? சொல்வது கரூர் கலெக்டர் தான் 
  
 
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழக அரசின் 100 நாள் சாதனை தொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள சுவரொட்டிகளை அறிமுகப்படுத்தியதோடு, அதனை வெளியிட்டு பின்னர் 100 நாள் சாதனை ஸ்டிக்கர் எனப்படும் ஒட்டுவில்லைகளையும் அறிமுகப்படுத்திய கரூர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிரபுசங்கர், முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது., கரூர் மாவட்டத்தில் மட்டும், வேளாண்மைத்துறை, மாவட்ட தொழில்மையம், மாற்றுத்திறனாளிகள் துறை என்று 37 துறைகளின் சார்பில் பல கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கியதாகவும், தமிழகத்திலேயே எந்த மாவட்டத்திலும், சரி மாநிலங்களிலும் சரி, நமது கரூர் தான் முன்னோடி என்று தெரிவித்தார். அப்போது, கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் எங்கும் சரி, கபசுரகுடிநீர் என்பது ஒருகண் துடைப்புக்கு கூட கிடையாது என்று கேட்டதற்கு மற்றும் வெப்பமாணி கொண்டு சோதிப்பது கிடையாது என்று கேட்டதற்கு, அனைத்து அரசு அலுவலகங்களிலும் எழில்மிகு அரசு அலுவலகங்கள் என்றமுறையில் மாநில அரசு வழிகாட்டுதலின்படி பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆகையால் புதர்மண்டிகிடப்பது முதல் மோசமான நிலையில் உள்ள அனைத்து அலுவலகங்களின் லிஸ்ட் எடுத்து வருகின்றோம், கண்கொள்ளா கரூர் என்கின்ற பெயரில் நடைமுறைக்கான உத்தேசத்தில் உள்ளோம், அதே போல, நீங்கள் சொன்ன விஷயத்தினையும் நாங்கள் கவனித்து வருவதோடு, அதை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறினார்.
 
பின்னர் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் கரூர் காந்திகிராமம் கே.கே.நகர் பகுதியில் 7 வயது சிறுமி அதாவது 2 ம் வகுப்பு பயிலும் மாணவி டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தார். அங்கு சுமார் 17 நபர்களுக்கு மேல் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டும், கரூர் நகராட்சி நிர்வாகம், மருத்துவத்துறை அங்கே எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை , அந்த பகுதியில் சிறிய அளவில் குளோரின் பவுடர்களை மட்டுமே வீசியுள்ளனர் என்று கூறியதற்கு, அதற்கு மாவட்ட ஆட்சியர், கரூர் நகராட்சியுடன் இணைந்து தடுப்புநடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்றார். 
 
வீடுதேடி வரும் மருத்துவம் என்கின்ற திட்டம் இருக்கும் போது கூட, கரூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் நடக்க கூட முடியாத நிலையில், அவர்களை அவர்களது உறவினர்கள் தூக்கி கொண்டு வந்து கொரோனா தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போடும் நிலை உருவாகியுள்ளது என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதற்கு தெளிவாக உங்களுக்கு சொல்கின்றேன், நம்முடைய 38 மாவட்டத்தில், மிக மிக குறைந்த மாவட்டத்தில் நாம் முன்னோடியான மாவட்டம் ஆகும்,  ஆனால் வீடுதேடி தடுப்பூசி திட்டம் என்பது சென்னை மாதிரியான பெருநகரத்திற்கு மட்டும் தான் என்றும், நம்முடைய மாவட்டத்தில் மட்டும் ஏன் ? வீடு தேடி சென்று போடக்கூடாது என்றால் ஒன்றிய அரசு (மத்திய அரசு) வழிகாட்டுதலின்படி தானே, தவிர, Reaction என்கின்றது வந்து விட்டால், அருகிலேயே ஆம்புலன்ஸ் ஐ வைத்து கொண்டு தான் வீட்டுக்கு சென்று தடுப்பூசி போட முடியும், குறிப்பாக இதை நான் சொல்ல கூடாது அனைத்து மாவட்டங்களில் சரி, மிக மிக குறைவாக தான் மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாகவும், நம்முடைய கரூர் மாவட்டத்தில் மட்டும் தான் 60 சதவிகித விழுக்காடு தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். மீதம் இருக்கும் 40 சதவிகித நபர்களுக்கு சரியான விழிப்புணர்வு இல்லை, அதையும் மாவட்ட நிர்வாகம் விரைவாக செய்து வருகின்றது. நீங்கள் சொல்லும் கருத்துகளை நாங்கள் வாங்கி கொண்டு நடவடிக்கை எடுக்கின்றோம் என்றார். மேலும்,  மதுபானம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தொகுதியிலேயே கரூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு மதுபானக்கடைகளில் சரி, கடைகளுக்கு வெளியே மதுப்பிரியர்கள் மதுக்களை வாங்கி கொண்டு அங்கேயே அருந்துவதால் பெண்கள் மற்றும் வயதானவர்கள் மிகவும் குடிமகன்களிடம் சிரமப்படுவதாக கூறியதற்கு, அதையும் காவல்துறை மற்றும் கலால்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.