வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 2 மே 2021 (16:41 IST)

மு.க ஸ்டாலின் வெற்றியை கணித்த பிரஷாந்த் கிஷோரின் அதிர்ச்சி முடிவு !

பிரதமர் மோடி, ஸ்மிருதி இரானி, போன்றோரின் தேர்தல் வியூக நிபுணராகப் பணியாற்றியவர் பிரஷாந்த் கிஷோர்.

இவர் , இந்தியாவில் உள்ள முக்கிய தலைவர்களின் தேர்தல் வெற்றிக்கு பல வியூகத்துடன் செயல்திட்டத்தை வகுத்து  செயல்படுத்தினார்.

திமுக வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் உறுதியாகியுள்ளதால் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு ,நாட்டின் உள்ளா முக்கிய தலைவர்கள் வாழத்துகள் கூறி வருகின்றனர். இத்தேர்தலில் ஸ்டாலின் பிரஷாந்த் கிஷோர்தான் தேர்தல் நிபுணராகப் பணியாற்றினார்.
 திமுக ஆட்சியைப் பிடிக்கும் என முன்னரே கணித்தார். அதுபோல் தற்போது நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், தற்போது பிரஷாந்த் கிஷோர் தேர்தல் வியூக துறையிலிருந்து விடுபட உள்ளதாகத் தகவல் வெளியாகிறது. மேலும், இனி இத்துறையில் தான் செய்வதற்கு ஒன்றுமில்லை எனக் கூறி இத்தேர்தலுடன் தன் வியூக துறையில் இருந்து விடுபடவுள்ளதாகக் கூறியுள்ளார்.