தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் அடிக்கடி மின் தடை ஏன்? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்..!
- 200 யூனிட் வரை இலவச மின்சாரம்.. அதிகாரபூர்வமாக அறிவித்தது TANGEDCO..!
- தமிழகத்தில் மின்சாரக் கட்டணம் திடீர் உயர்வு? பொதுமக்கள் புகாருக்கு அதிகாரிகள் விளக்கம்!
- அதிகரிக்கும் மின் வாகனங்கள்! 500 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள்! - மின்வாரியம் அறிவிப்பு!
- பாட்டிலுக்கு 10 ரூபாய், 20 ரூபாய் அதிகமாக வாங்கிய 23 பணியாளர்கள் சஸ்பெண்ட்.. அதிரடி நடவடிக்கை...!
மின்சார வாரிய தலைமையகத்தில் 10 ஹார்டு டிஸ்க்குகள் மாயம்.. ரகசிய தகவல்கள் திருட்டு?
தமிழ்நாடு மின்சார வாரிய தலைமையகத்தில் அதிர்ச்சியூட்டும் வகையில், டெண்டர் ஆவணங்கள் அடங்கிய 10 ஹார்டு டிஸ்க்குகள் மாயமாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மின்வாரியத்தின் மிக முக்கியமான மற்றும் ரகசிய தகவல்களான நிலக்கரி கொள்முதல் தொடர்பான விபரங்கள் இந்த ஹார்டு டிஸ்க்குகளில் சேமிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளதாக மின்வாரிய தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலக்கரி கொள்முதல் மற்றும் ஒப்பந்தப் புள்ளிகள் தொடர்பான முக்கிய தரவுகள் திருடப்பட்டிருப்பது மின்சார வாரிய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மர்ம திருட்டு சம்பவம் குறித்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், சிந்தாதிரிப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைமையகத்தின் பாதுகாப்பு வளையத்தை மீறி, ரகசிய தகவல்கள் அடங்கிய ஹார்டு டிஸ்க்குகளை திருடி சென்ற நபர்கள் யார், இதன் பின்னணியில் இருக்கும் கூட்டுச்சதி என்ன என்பது குறித்து சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் முதற்கட்ட விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
Edited by Siva
