1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. கறிக்கோழி விற்பனை கடையடைப்பு போராட்டம் வாபஸ்!..

கறிக்கோழி விற்பனை கடையடைப்பு போராட்டம் வாபஸ்!..

broiler
விற்பனைக்கு அனுப்பப்படும் கறிக்கோழிகளுக்கு குறைந்தபட்சம் 15 மணி நேரத்திற்கு முன்பே உற்பத்தியாளர்கள் தீவனம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு கோழி வணிகர் கூட்டமைப்பு சங்கம் கோரிக்கை வைத்தது. ஆனால் அதை பிராய்லர் கோழி உற்பத்தியாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

எனவே, ஜூலை 31ம் தேதியான நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும், தமிழ்நாடு புதுச்சேரி ஆக இரண்டு மாநிலங்களில் உள்ள அனைத்து பிராய்லர் கோழி கறி கடைகளும் மூடப்படும் எனவும் வணிகர் கூட்டமைப்பு சங்கங்கள் அறிவித்தது..

இது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில்தான் தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு வலியுறுத்திய தீவனக் கட்டுப்பாட்டை கடைபிடிப்பதாக உற்பத்தியாளர்கள் உறுதியளித்ததால் நாளை நடக்கவிருந்த பிராய்லர் கோழி வணிகர்களின் கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தமிழ்நாடு கறிக்கோழி வணிகர்கள் கூட்டமைப்பு தற்போது அறிவித்திருக்கிறது.

எனவே பிராய்லர் கோழி பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
யாரா இருந்தாலும் விட்ராதீங்க!.. ஆக்சன் எடுங்க!.. விஜய் போட்ட ஆர்டர்!...