வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 14 மார்ச் 2019 (11:56 IST)

போன் ஒயர் பிஞ்சு 3 நாள் ஆச்சு – இணையத்தில் உலாவரும் மோடி ஜோக் !

பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக மோடி ஜோக் என்ற பெயரில் சில ஜோக்குகள் உலாவர ஆரம்பித்துள்ளன.

கடந்தத் தேர்தலில் நாடு முழுவதும் வீசுவதாக சொல்லப்பட்ட மோடி அலை இந்த தேர்தலில் அவருக்கு எதிர் திசையில் வீசிக்கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் கடந்த மோடி அறிவித்த கருப்புப் பணம் ஒழித்தல் மற்றும் ஒவ்வொரு இந்தியர்களின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம்  போடுதல் போன்ற வாக்குறுதிகள் எதையும் அவர் நிறைவேற்ற இயலவில்லை.

அதனால் இந்த தேர்தலில் இப்போது மோடியைக் குறித்த கேலிகள் பரவலாக எங்கும் பேசப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இப்போது மோடி ஜோக் என்ற ஒன்று இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

சமீபத்தில் நாகப்பட்டினத்தில் நடந்த ஒரு அரசியல் நிகழ்வில் பிருந்தாகாரத் என்பவர் மோடி பற்றிய கூறிய சம்பவம் ஒன்றில் ‘வட இந்தியாவில் “மோடி ஒரு கூட்டத்தில் பெண்களிடம் “ உங்கள் தேவை என்ன ?என்று கேட்டதற்கு . அவர்கள் தங்கள் கிராமத்தில் ”மருத்துவரே இல்லை”ன்னு சொல்லவும் உடனே மோடி செல்போனில் ஏதோ பேசிவிட்டு ”உங்கள் கிராமத்திற்கு மருத்துவரை ஏற்பாடு செய்துவிட்டேன். வேறு என்ன வேண்டும்.?”ன்னு கேட்டதுக்கு. “எங்கள் கிராமத்தில் எந்த போனுக்கும் சிக்னலே கிடைக்க மாட்டேங்குது”ன்னு சொன்னாங்களாம்.’ எனத் தெரிவித்தார்.