கன்னியாகுமரியில் ராகுல் பேச்சு– ஒரு மேற்பார்வை !

Last Modified வியாழன், 14 மார்ச் 2019 (08:47 IST)
ராகுல்காந்தி கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று கன்னியாகுமரியில் நடந்து முடிந்தது.

திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டம் நேற்று கன்னியாகுமரியில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. கூட்டத்தில் ராகுல் காந்தியின் பேச்சு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ராகுல் பேச்சின் முக்கியமான அம்சங்கள் சிலவற்றைக் காண்போம்

விரைவில் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக வருவார். கலைஞர் நம்மிடம் இருக்கிறார் என்பதோடு அவர் நம்மை எப்போதும் வழிநடத்துவார் என்பதைச் சொல்ல விரும்புகிறேன். காமராஜரும், கலைஞரும் மக்கள் மனங்களில் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசால் தமிழ் மொழிக்கும், தமிழ்க் கலாச்சாரத்திற்கும் தமிழர்களுடைய வாழ்வுரிமைக்கும் எதிரானவை நடந்துவருவதை நாம் பார்க்கிறோம். அதனை வென்றெடுக்கும் கூட்டணியாக இந்தக் கூட்டணி அமைந்துள்ளது.

கடந்த காலங்களில் திமுக - அதிமுக என்ற போட்டி இருந்தது. இரு கட்சிகளிலும் பெரிய தலைவர்கள் இருந்தனர். ஆனால் இப்போதுள்ள தமிழக அரசை மத்தியில் இருக்கும் மோடி ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. தமிழக விவசாயிகள் டெல்லியில் போராடுவதை நான் நேரில் பார்த்துள்ளேன்.  மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபிறகு விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளோம். மோடி மக்களின் வங்கிக் கணக்குகளில் 15 லட்சம் போடுவேன் எனக் கூறி ஏமாற்றியுள்ளார்.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை மாற்றியமைப்போம். ஒரே வரி, எளிமையான வரி, குறைந்தபட்ச வரியை அமல்படுத்துவோம். மீண்டும் பசுமைப் புரட்சி மற்றும் வெண்மைப் புரட்சியைக் கொண்டுவருவோம்.

மத்தியிலே காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைப்போம். 33% மகளிர் இடஒதுக்கீட்டு சட்டத்தை முதலில் நிறைவேற்றுவோம். 

முன்னதாக கூட்டத்தினை விரைவாக முடித்துவிட்டு ராகுல் காந்தி 6 மணிக்குள்ளாக கிளம்ப வேண்டும் என்பதால் மற்றக் கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கு பேச சிறிது நேரமே வழங்கப்பட்டது.இதில் மேலும் படிக்கவும் :