தொடர்புடைய செய்திகள்
- பொள்ளாச்சி விஷயத்தில் அமமுக வேடிக்கை பார்க்காது – தினகரன் ஆவேசம் !
- எல்லா பொண்ணுக்கும் இருக்கிற உடம்புதான் எனக்கும் இருக்குனு சொல்லு: சூர்யாவின் நீண்ட அறிக்கை
- என்னங்கடா உங்க ஆட்சி? தொதித்தெழுந்த பிரபல இயக்குனர்
- பொள்ளாச்சி விவகாரத்தால் மாணவர்கள் போராட்டம்: கல்லூரிகளுக்கு விடுமுறை
- பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: எஃப்.ஐ.ஆர் மிஸ்சிங்; என்ன செய்கிறது போலீஸ்?
பொள்ளாச்சி விவகாரம்: சிபிஐக்கு மாற்றி அரசாணை வெளியீடு!!!
பொள்ளாச்சி பாலியல் குற்றச்சாட்டு வழக்கை சிபிஐக்கு மாற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக கிட்டதட்ட 200க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து பெண்களை மிரட்டி வந்துள்ளனர் 20க்கும் மேற்பட்ட அயோக்கியர்கள். இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து தமிழகம் முழுவதும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவ்வழக்கில் போலீஸார் வசந்தகுமார், செந்தில், சதீஷ், திருநாவுக்கரசர் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவன்கள் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. இந்த வழக்கை கோவை போலீஸார் விசாரித்து வந்த நிலையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்த நிலையில் இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் தற்போது இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
