1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (00:02 IST)

கணவரை செருப்பால் அடித்த மனைவி

கரூர் மாவட்டத்தில் மது குடித்துவிட்டு, சாலையில் மயங்கிக் கிடந்தவரை அவரது மனைவி செருப்பால் அடித்துள்ளார்.

கரூர் மாவட்டம் தான் தோன்றிமலையில் உள்ள அரசு மதுபானக் கடைக்கு வந்த ஒருநபர் அதிகமாகக் குடித்துள்ளார். பின்னர் மதுபாட்டிலுக்குக் கூடுதலாகப் பணம் வாங்கியதாகவும் அங்கு கேட்டுப் பிரச்சனை செய்துள்ளதால அவரை சிலர் அடித்ததாகத் தெரிகிறது.

பின்னர், அந்த நபர் சாலையில் மயங்கி விழுந்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவியிடம் சிலர் கூறியுள்ளனர். அங்கு வந்த அவரது மனைவி தன் கணவரை செருப்பால் அடித்தார். அப்போது, போதை தெளிந்ததுபோல் காணப்பட்ட அந்த நபர் அவருடன் சென்றார்.