திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (20:13 IST)

விஜய்சேதுபதியின் ‘’அனபெல் சேதுபதி’’ பட டிரைலர் ரிலீஸ்!

விஜய் சேதுபதி நடித்த அனபெல் சேதுபதி என்ற திரைப்படத்தின் டிரைலர் இன்று ரிலீஸாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் உருவாகியுள்ளபடம் அனபெல். இப்படத்தில் அவருடன் டாப்ஸி நடித்துள்ளார்.

ஏற்கனவே திரில்லர்ச் சப்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் வரு  செப்டம்பர் 17ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்

 
ஏற்கனவே விஜய் சேதுபதியின் துக்ளக் டஹ்ர்பார், கடைசி விவசாயி, மாமனிதன் ஆகிய திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக கூறப்படும் நிலையில் அவருடைய இன்னொரு படமும் ஓடிடியில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் விஜய் சேதுபதியால் லாபம் திரைப்படம் செப்டம்பர் ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 #AnnabelleSethupathiTrailer.