கொரோனா 3ம் அலை தீவிரமடையும் !
இந்தியாவில் வரும் அக்டோபர் மாதத்தில் கொரொனா 3 ஆம் அலை தீவிரமடையும் எனத் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்குப் பரவிய கொரொனாவால் பல கோடிப்பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது. விரைவில் கொரொனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளது என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில மாநிலங்களில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப்பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே 3 ஆம் அலை தீவிரமடையும் என்று ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.