1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala
Last Modified: புதன், 5 ஜனவரி 2022 (15:27 IST)

சூப்பரான சுவையில் சிக்கன் சமோசா செய்ய !!

தேவையான பொருள்கள்:
 
சிக்கன் - 250 கிராம் (எலும்பில்லாதது)
இஞ்சி - 1 துண்டு ( பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
மைதா - 250 கிராம்
5 சோம்பு - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
கரம் மசாலா - 1 ஸ்பூன்
பட்டாணி - 1 கப் (வேக வைத்தது)
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி

செய்முறை:
 
முதலில் மைதாவை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, அதனுடன் உப்பு சிறிதளவு எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
 
சிக்கனை நன்றாக கொந்தி, நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானவுடன் அரை ஸ்பூன் சோம்பு சேர்த்துக் கொள்ளவும். சோம்பு பொரிந்தவுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
 
வெங்காயம் வதங்கியவுடன் கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி, பின்னர் வேக வைத்த பச்சை பட்டாணி, சிக்கன், சேர்த்து நன்கு கிளறி சிறிதளவு கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.
 
இப்போது நாம் பிசைந்து வைத்துள்ள மைதா மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வட்டமாக தேய்த்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கத்தி வைத்து அதனை அரை வட்டமாக வெட்டி அதில் இன்னும் கூட தேவையான அளவு மைதா மாவை தூவி நீள வாக்கில் ரிப்பன் போல நன்கு தேய்க்கவும். இருக்கின்ற எல்லா மாவையும் இதே போல செய்து ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் பார்த்துக் கொள்ளவும்.
 
பிறகு சப்பாத்திக் கல்லை அடுப்பில் வைத்து ஒரு நிமிடம் மட்டும் வாட்டி எடுத்துக் கொள்ளவும். இந்த ரிப்பன் போல தேய்த்த மாவின் நுனியை மடக்கி அதனுள் ஒரு டீஸ்பூன் அளவு சிக்கன் கலவை வைத்து முக்கோண வடிவில் மடிக்கவும். கடைசியாக வரும் பகுதியை மைதா பசையால் ஒட்டி விடவும்.
 
பின்னர் ஒரு கடாயில் சமோசா பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து, சூடானதும் சமோசாக்களை எண்ணெயில் சேர்த்து பொறித்து எடுத்தால் சுவையான சிக்கன் சமோசா தயார்.