சுவையான இறால் பிரியாணி செய்வது எப்படி....?

Prawn biryani
Sasikala|
தேவையான பொருட்கள் :
 
இறால் - 1/2 கிலோ
பாஸ்மதி அரிசி - 400 கிராம்
வெங்காயம் - 4
தக்காளி - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
பச்சை மிளகாய் - 2
இஞ்சிபூண்டு விழுது - 1 1/2 மேஜை கரண்டி
கரம்மசாலா தூள் - 3 மேஜை கரண்டி
கொத்தமல்லி - தேவைக்கு ஏற்ப
புதினா இலை - தேவைக்கு ஏற்ப
பிரியாணி இலை தேவைக்கு ஏற்ப
எலுமிச்சை - 1
நெய் - 4 மேஜை கரண்டி
எண்ணெய் - 4 மேஜை கரண்டி
தயிர் - 1 கப்
தேங்காய் பால் - 2 மேஜை கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை:
 
இஞ்சி பூண்டுடன் பட்டை கிராம்பு ஏலக்காய் தயிர் வெங்காயம் சேர்த்து கலந்து வைக்கவும். இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.வெங்காயம், தக்காளியையும் நீள வாக்கில் வெட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய்யையும் ஊற்றவும். எண்ணெய் காய்ந்த  பின்பு வெங்காயத்தை போடவும்.
 
வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சிபூண்டு கலவையினை போடவும். பச்சை வாடை போகும் வரை வதக்கவும். அடுத்து தக்காளி உப்பு கரம்  மசாலாத்தூள் சேர்க்கவும். நன்கு வதக்கியதும் பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, புதினா இலை போட்டு கிளறி பின்பு இறாலை  சேர்க்கவும். 5 முதல் 10 நிமிடம் வேகவைத்து பின் தேங்காய் பால், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை  அனைக்கவும்.
 
அரிசி நன்றாக கழுவி 1-க்கு 1 3/4 அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். அதில் இறால் கிரேவியை கலந்து தேவைப்பட்டால் உப்பு  சேர்த்து குக்கரில் விசில் போடாமல் 20 நிமிடங்கள் வைத்து இறக்கவும். பிரியாணி தயாரான பின்பு கடைசியாக எலுமிச்சை சாறு ஊற்றி  பரிமாறவும். சூடான சுவையான இறால் பிரியாணி தயார்.


இதில் மேலும் படிக்கவும் :