தாய்ப்பாலை அதிகரிக்கும் உணவுவகைகள் பற்றி அறிந்து கொள்வோம்...!!

Breastfeeding
Sasikala|
சில உணவுகளை உண்டாலே தாய்ப்பால் அதிகமாகும். இவ்வாறு அத்தகைய உனவுகளை உண்பதால் தாய்ப்பால் அதிகமாவதோடு தாயின் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அத்தகைய உணவுகள் என்னவென்று பார்ப்போம்.
வெந்தயத்தில் அதிகமான அலவு இரும்புச்சத்து, வைட்டமின், கால்சியம் மற்றும் கனிமச்சத்துக்கள் இருக்கின்றன. இவர்றை சாப்பிட்டால்  உடலில் இருக்கும் தாய்ப்பாலின் அளவு அதிகமாகும்.
 
முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும்.
 
காய்கறிகளில் சுரைக்காய், பூசணிக்காய், புடலங்காய் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டாலும் தாய்ப்பால் அதிகமாகும். ஏனெனில் அதில்  வைட்டமின், கனிமச்சத்து போன்றவை உள்ளது.
 
கொழுப்பு நிறைந்துள்ள பொருட்களான நெய், வெண்ணெய் மற்றும் எண்ணெய் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டாலும்,  தாய்ப்பால் அதிகரிக்கும்.
 
பூண்டை பாலில் சேர்த்து சாப்பிட்டாலும் தாய்ப்பால் அதிமாக சுரக்கும். மேலும் அதனை அப்படி சாப்பிட பிடிக்காதவர்கள், தினமும் உண்ணும் உணவுகளில் சேர்த்து சாப்பிட வேண்டும்.
 
பாதாம் மற்றும் முந்திரி போன்றவைகளும் தாப்பாலை அதிகரிப்பவை. ஏனென்றால் அதில் புரோட்டீன், வைட்டமின் மற்றம் கனிமச்சத்துக்கள் இருக்கிறது. ஆகவே அதனை மாலை வேளைகளில் ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம்.
 
நார்ச்சத்துள்ள உணவுகள் : கீரைகள் மற்றும் சிவப்பு காய்களில் அதிகமாக நார்ச்சத்துக்கள் இருக்கும். அதிலும் பசலைக்கீரை, பீன்ஸ், உருளைக்கிழங்கு மற்றும் பீட்ரூட் போன்றவற்றில் அதிகமான அளவு நார்ச்சத்துக்கள் இருக்கின்றன.


இதில் மேலும் படிக்கவும் :