பேபி கார்ன் முட்டை பொரியல் செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
முட்டை - 2,  
பேபி கார்ன் - ½ கப், 
தேங்காய் பால் - 20 மி.லி., 
வெங்காயம் - 1, தக்காளி - 1, 
இஞ்சி, பூண்டு விழுது - ½ டீஸ்பூன், 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், 
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன், 
தனியா தூள் - ½ டீஸ்பூன், 
பட்டை - 1, கிராம்பு - 1, 
ஏலக்காய் - 2, 
உப்பு, எண்ணெய், கொத்துமல்லி - தேவையான அளவு.
செய்முறை:
 
அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடான பின்னர் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்நிறமாக வரும் வரை வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும், இத்துடன் பேபி கார்ன் சேர்க்கவும். 
 
பின்பு மசாலா சேர்க்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள். இத்துடன் முட்டை உடைத்து இதனுடன் கலக்கவும். அல்லது முட்டையை தனியாக பொரியல் (பொடிமாஸ்) செய்து இதனுடன் கலக்கவும். உப்பு மற்றும் கொத்துமல்லி இலை சேர்த்துக் கிளறவும். சுவையான பேபி கார்ன் முட்டை பொரியல்  தயார்.


இதில் மேலும் படிக்கவும் :