திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By

பன்னீர் வெஜ் பால்ஸ் செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
பன்னீர் - 250 கிராம்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய்  -2  
கேரட்,பீன்ஸ், பச்சை பட்டாணி - அரை கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் -  1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், - தலா கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள், மிளகு தூள் - தலா கால் டீஸ்பூன்
சீரகம், சோம்பு தூள்கள் - தலா கால் டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
பிரெட் - 2 பெரிய ஸ்லைஸ் (துண்டாக்கி மிக்ஸியில் போட்டு உதிர்த்துக் கொள்ளவும்)
உருளைக்கிழங்கு -  200 கிராம்
உப்பு - சுவைக்கு
ப்ரெட்  கிரெம்ஸ் - 1 கப்
மைதா 2 டேபிள்ஸ்பூன் 
அரைகப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
எண்ணெய்  - தேவையான அளவு
செய்முறை:
 
கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விடவும்.நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய் சேர்க்கவும் நல்ல பிரட்டி விட்டு ஆற வைக்கவும். ஒரு கடாயில் உதிர்த்த பன்னீரை 2 டீஸ்பூன் எண்ணெயில் எல்லா மசாலாவும் சேர்த்து நன்கு பிரட்டி விட்டு ஆற வைக்கவும்.
 
அதனை ஒரு பவுலில் எடுக்கவும். அத்துடன் வதக்கிய வெங்காயம், வேக வைத்த காய்கறிகள், நறுக்கிய மல்லி இலை,உதிர்த்த ப்ரெட் அல்லது உருளைக்கிழங்கு வேக வைத்தது சேர்க்கவும். உருண்டைகளாக பிடிக்கவும். உருண்டைகளை மைதா கரைசலில் நனைத்து, பிரெட் கிரெம்ஸில் பிரட்டி வைக்கவும்.
 
ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கவும். மிதமான சூட்டில் கட்லெட்டை பொன்னிறமாக பொரித்து எண்ணெய் வடித்து எடுக்கவும். சுவையான பன்னீர் வெஜ்  பால்ஸ் தயார். இதை தக்காளி சாஸ்ஸுடன் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.