வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By

சேமியா முட்டை பிரியாணி செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
சேமியா - 1 கப்
நெய் - 3 டீஸ்பூன்
பட்டை - 2
வெங்காயம் - 1
தக்காளி - 1
முட்டை - 1
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
செய்முறை:
 
சேமியாவை நெய் விட்டு வறுத்து கொள்ள வேண்டும். அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, வெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி பின்பு முட்டையை உடைத்து ஊற்ற வேண்டும்.
 
இதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவேண்டும். கொதித்த பிறகு, சேமியாவை சேர்க்க வேண்டும். நன்கு வெந்தபிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான சேமியா முட்டை பிரியாணி தயார்.