பலாப்பழம் சாப்பிட்ட பிறகு சில உணவுப்பொருட்களை சாப்பிடக்கூடாது ஏன்...?
பலாப்பழம் சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், இது நம் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளையும் தருகிறது. பலாப்பழத்தில் நமது உடல் வளர்ச்சிக்கும் மிகவும் இன்றியமையாத வைட்டமின் ஏ யும் சுண்ணாம்புச் சத்தும் அதிக அளவில் உண்டு.
பலாபழத்தில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட ஆனது. உடலில் உள்ள தீங்கு விளைவிக்கக் கூடிய காரணிகளை நீக்கிவிடுகிறது. அதன் மூலம் ஏற்படும் சேதத்தையும் குறைத்து பல விதமான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது
பொட்டாசியம், இரும்பு, கால்சியம், துத்தநாகம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவை பலாப்பழத்தில் ஏராளமாகக் காணப்படுகின்றன, ஆனால் பலாப்பழம் சாப்பிட்ட பிறகு சில உணவுப்பொருட்களை சாப்பிடக்கூடாது.
பலாப்பழம் சாப்பிட்ட பிறகு பால் குடிக்கக்கூடாது. பலாப்பழம் சாப்பிட்ட பிறகு, உடனடியாக பால் குடிக்கக்கூடாது. அப்படி குடித்தால், அது தாங்க முடியாத வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.
வைட்டமின் பி, சி போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் கொண்டு திகழும் இப்பழம் வாயுவை ஓரளவு உண்டு பண்ணுடையதாக இருந்தாலும், ரத்த விருத்திக்குச் சிறந்து விளங்குவதாகும்.
பலாப்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, புரதம், விட்டமின் சி, ரிபோஃப்ளோவின், மெக்னீஷியம், பொட்டாசியம், தாமிரம், போன்ற ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
பலாப் பழத்தைச் சிறிய அளவில் சாப்பிட்டால் மலச்சிக்கல் அகலும். ஆனால் பலாப் பழத்தை அதிக அளவில் உண்பது உடல் நலத்திற்கு நல்லதல்ல.