உடலுக்கு தேவையான உடனடி எனர்ஜியை தரும் பேரீச்சை !!
தினமும் ஆறு பழங்களைச் சாப்பிட்டுவர உடல் எடை அதிகரிக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமடையும்.
பேரீச்சையில் இயற்கையாகவே இனிப்பு அதிகம். சுக்ரோஸ், ஃப்ரெக்டோஸ் மற்றும் குளூக்கோஸ் நிறைந்துள்ளன. மதிய நேரங்களில் ஏற்படும் மந்தநிலையை சீர்செய்து உடலுக்குத் தேவையான உடனடி எனர்ஜியைத் தரும். மேலும், இதில் நிறைந்துள்ள மாவுச்சத்து உடல் ஆரோக்கியத்துக்கு உதவும்.
பேரீச்சையில்இதில் உள்ள மாங்கனீசு, மக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற நுண் சத்துகள் எலும்பை வலுவாக்கும். பேரீச்சையை உணவுடனும் சேர்த்துக் கொள்ளலாம். எலும்பின் வளர்ச்சிக்கு உதவும். மேலும், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு நோயில் இருந்து நம்மைக் காக்கிறது.
குறிப்பாக, பெண்கள் பேரீச்சையை உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும். பெண்களுக்கு ஏற்படும் எலும்புறுக்கி நோயைக் குணப்படுத்தும். வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் வலியைக் குறைக்க உதவுகிறது.
பேரீச்சையில் உள்ள கரிம சல்ஃபர், உடலில் ஏற்படும் அலர்ஜிகள் மற்றும் ஒவ்வாமையைச் சரிசெய்யும். பெண்களுக்குச் சீரான மாதவிடாய்ச் சுழற்சியை ஏற்படுத்தும். வயிற்றுப் புற்றுநோயைக் குணப்படுத்தக்கூடியது.
பேரீச்சையில் நிறைந்துள்ள பொட்டாசியம், இதய நோய்களில் இருந்து நம்மைக் காக்கிறது. பலவீனமான இதயத்துக்கு பலம் தரும். இதயத்துக்கு இம்சை தரக்கூடிய கெட்ட கொழுப்பைக் குறைக்கப் பெரிதும் உதவுகிறது. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.