1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Why should Bottle gourd be included in the diet often...?

அடிக்கடி உணவில் ஏன் சுரைக்காயை சேர்த்துக்கொள்ள வேண்டும்...?

Bottle gourd
சுரைக்காயில் வைட்டமின் பி, சி சத்துகளை கொண்டுள்ளது. அஜீரணக்கோளாறு உள்ளவர்கள் சுரைக்காயை சாப்பிடலாம். கோடை காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. மேலும் நாவறட்சியை போக்கும்.


சுரைக்காயின் சதைப் பகுதியை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து பருகி வர சீறுநீரக கோளாறுகளிலிருந்து குணம் பெறலாம். சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு, ஆகிய நோய்களுக்கு சிறந்தது.

நாக்கு வறட்சி ஏற்படும் சமயம் ஒரு கப் பச்சையான சுரைக்காய் ரசத்தில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு அருந்தினால் நாவறட்சி நீங்கும். உப்பு போடாமல் இந்த ரசத்தை அருந்தக்கூடாது.

கை, கால் எரிச்சல் நீங்க சுரைக்காயின் சதைபகுதியை எரிச்சல் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் எரிச்சல் குறையும். உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள விரும்பினால் சுரைக்காயை பயன்படுத்தலாம்.

அதீத ரத்த அழுத்தம் ஏற்பட்டு அதை குறைக்க விரும்புபவர்கள் ஒரு துண்டு சுரைக்காய், விதை நீக்கிய ஒரு நெல்லிக்காய் இவற்றை நீர்விட்டு அரைத்து சாறு பிழிந்து வாரம் இருமுறை காலையில் வெறும் வயிற்றில் பருகி வந்தால் அதீத இரத்த அழுத்தம் விரைவில் கட்டுப்பாட்டிற்குள் வரும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த காயை அடிக்கடி பயன்படுத்தி வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும். வெப்பத்தினால் வரும் தலைவலி நீங்க சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
உடலுக்கு தேவையான உடனடி எனர்ஜியை தரும் பேரீச்சை !!