1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (17:41 IST)

கோடையில் அரிப்பை ஏற்படுத்தும் பொடுகை போக்க உதவும் சில டிப்ஸ் !!

Dandruff
கூந்தல் உதிருவதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று, பொடுகு. சிலருக்கு பொடுகு காரணமாக தலையில் அரிப்பு போன்றவை ஏற்படும்.


மிளகுதூளுடன் பால் சேர்த்து தலையில்தேய்த்து சில நிமிடங்கள் ஊறியபின் குளித்தால், "பொடுகு தொல்லை நீங்கும்".

வெந்தயத்தை தலைக்குதேய்த்து குளித்தால், உடல்உஷ்ணம் குறைவதுடன் பொடுகுதொல்லை நீங்கும்.

தலையில் சிறிதளவு தயிர்தேய்த்து சிலநிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்.

வேப்பிலை கொழுந்து துளசி ஆகியவற்றை நைசாக அரைத்து தலையில்தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளித்தால் பொடுகுதொல்லை நீங்கும்.

வசம்பை நன்குபவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, அந்த எண்ணெயை தலையில்தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துபோகும்.

எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய்எண்ணெய் கலந்து தலையில்தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம்பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சைபயிறு மாவு கலந்து தலையில்தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்புபோட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.

நெல்லிக்காய் தூள், வெந்தயப்பொடி, தயிர் மற்றும் கடலைமாவுகலந்து தலையில்தேய்த்து, சிறிதுநேரம் கழித்து குளிக்கவேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவர பொடுகு நீங்கும்.

வாரம் ஒருமுறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தலையில்தேய்த்தால், பொடுகுதொல்லை நீங்கும்.