1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. White pumpkin can easily cure various diseases !!

பல்வேறு நோய்களை எளிதில் குணமாக்கும் வெள்ளை பூசணிக்காய் !!

வெள்ளை பூசணி
வெள்ளை பூசணிக்காய் உள்ள நீர்ச்சத்துக்கள் உடல் எடையை விரைவாக குறைப்பதற்கு உதவுகிறது.


வெண்பூசணியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி சாறு எடுத்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து ஒரு டம்ளர் அளவிற்கு காலை வெறும் வயிற்றில் தினமும் அருந்தி வரும் பொழுது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைந்து உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

வெண்பூசணி சாற்றை தினமும் அருந்தி வரும் பொழுது வயிறு குடற்பகுதியில் உள்ள உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வயிற்றுப்புழுக்கள், நாடா புழுக்கள் அனைத்தும் அழிந்து வெளியேறிடும்.

வெள்ளை பூசணிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வரும் பொழுது கண் பார்வை திறன் அதிகரிக்க தொடங்கும்.

வெள்ளை பூசணிக்காய் ரத்தத்தில் உள்ள நச்சுக்களையும், கழிவுகளையும் வெளியேற்றி ரத்தத்தினை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. ரத்தசோகை பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ளை பூசணிக்காய் சாறு சிறந்த நிவாரணத்தை அளிக்கிறது.

அல்சர் பிரச்சனையால் ஏற்படும் நெஞ்சு எரிச்சல், வவயிற்று ஏரிச்சல் போன்ற பாதிப்புகள் வெண்பூசணி சாற்றை தொடர்ந்து அருந்தி வரும் பொழுது குணமாகும். வயிற்றில் உருவாகும் அதிகப்படியான அமிலச்சுரத்தின் தீவிரத்தை குறைது சமநிலைப்படுத்தி வயிற்றை குளிரச் செய்கிறது.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
நெல்லிக்காய் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் தெரியுமா....?