1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 17 ஜனவரி 2022 (19:07 IST)

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும் ஆவாரம் பூ !!

“ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ” எனும் பழமொழி ஆவாரம் பூவின் மருத்துவ குண மகிமையை கூறுகிறது.


எப்படிப்பட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாலும், ஆவாரம் பூக்களை போட்டு வேக வைத்த தண்ணீரை காய்ச்சல் ஏற்பட்ட காலங்களில் அவ்வப்போது பருகி வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து காய்ச்சல் வெகு விரைவில் நீங்கும்.

இப்பூக்களை அவ்வப்போது பக்குவப்படுத்தி சாப்பிட்டு வருவதால் உடலில் தொற்று கிருமிகளால் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும். கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்த ஆவாரம் பூ சிறந்த இயற்கை மருந்தாக இருக்கிறது.

நிழலில் உலர்த்தப்பட்ட்ட ஆவாரம் பூக்களை போட்டு, நன்கு கொதிக்க வைத்து, அந்நீரை வடிகட்டி பனங்கற்கண்டை சிறிதளவு சேர்த்தால் ஆவாரம் பூ தேநீர் தயார். இத் தேநீரை தினமும் நீரிழிவு நோயாளிகள் பருகி வந்தால் நீரிழவு நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

ஆவாரம் பூ ஊற வைக்கப்பட்ட நீர் அல்லது ஆவாரம் பூ போட்டு காய்ச்சி வடிகட்டி ஆறிய நீரை பருகி வந்தால் உடலில் ஏற்படும் நீர் வறட்சியை போக்கலாம்.

சில பெண்களுக்கு மாத விடாய் காலத்தில் அதிக ரத்த போக்கு ஏற்பட்டு, அடிவயிற்றில் வலி மிகுந்து அவதிப்படும் நிலை ஏற்படுகிறது. இச்சமயங்களில் ஆவாரம் பூக்களை கூட்டு போல் செய்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது நிற்கும்.