1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 18 ஜனவரி 2022 (10:31 IST)

அன்றாட உணவில் அவரைக்காயை சேர்த்துக்கொள்வதால் இத்தனை நன்மைகளா....?

அவரைக்காய் கொடி வகையை சேர்ந்தது. அவரைக்காயில் பிஞ்சு காய் நல்ல சுவையைத் தரும். இதில் உள்ள சுண்ணாம்பு சத்து மற்றும் வைட்டமின்கள் உள்ளது.


அவரைக்காயில் புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின் சத்துகளும் தேவையான அளவு இருக்கிறது. பிஞ்சு அவரைக் காயைப் பத்தியத்திற்குப் பயன்படுகிறது.

அவரைக்காயுடன் பூண்டு, மிளகு, சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

மருந்து சாப்பிடுபவர்கள், விரதம் இருப்பவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இது உடலுக்கு வலுவைத் தரும்.

அவரைக்காயை சாம்பார், காரக்குழம்பு, பொரியல், கூட்டு என்று எதில் வேண்டுமானாலும் பயன்படுத்தி உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம். அவரைக்காயைப் பயன்படுத்துவதினால் குடல் வலுப்பெறுகிறது. பசியைத் தூண்டுகிறது. பித்தத்தைச் சரிசெய்கிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கும் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் அவரைக்காய் மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக பிஞ்சு அவரை மிகவும் உடல் நலத்திற்கு உகந்தது.

இதில் நார்ப்பொருள் அதிகமாக இருப்பதினால் மலச்சிக்கலையும் போக்குகிறது. உடல் வலிமையை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு.