புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 17 ஜனவரி 2022 (19:00 IST)

இத்தனை அற்புத பயன்களை கொண்டதா உருளைக்கிழங்கு !!

உருளைக் கிழங்கை போதிய அளவு வில்லையாகத் துண்டித்து இரண்டு கண்களின் மேலேயும் வைத்துக் கொண்டு சிறிது நேரம் அமைதியாக கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருக்க கண் சிவப்பு, கண் எரிச்சல் கண்களில் ஏற்படும் சோர்வு காணாமல் போகும்.


* பாலுள்ள, பிசுபிசுப்பான காய்கறிகளைக் கையாள்வதாலோ வேறு ஏதேனும் காரணங்களால் கைகளில் பிசுபிசுப்பு ஏற்பட்ட நிலையில் உருளைக் கிழங்கு பசையை கைகளில் இட்டுத் தேய்த்துக் கழுவ பிசுபிசுப்புத் தன்மை பறந்து போகும்.

* வெள்ளிப் பாத்திரங்கள் கறுத்துப்போவது என்பது இயற்கை. உருளைக்கிழங்கை நீரில் இட்டு கொதிக்க வைத்து எடுத்த நீரை ஆற வைத்து கறுத்த வெள்ளிப் பொருட்களை ஒருமணி நேரம் அந்த நீரில் ஊறவைத்து எடுக்க பளபளப்பாக விளங்கும்.

* வயிற்றில் சுரக்கும் அமிலம் இரவு நேரத்தில் நம் தூக்கத்தைக் கெடுக்கக் கூடியதாக இருக்கும். வயிற்றில் எரிச்சல், வயிற்று உப்பிசம் உடையவர்கள் நன்கு வேகவைத்து மசித்து ஒரு உருளைக் கிழங்கைச் சூடான பாலுடன் சேர்த்து பருகுவதால் அமிலச்சுரப்பு மட்டுப்பட்டு தூக்கம் அமைதியான உணர்வு உண்டாகும்.

* உருளையில் மிகுந்துள்ள சத்துக்களோடு டேனின்ஸ், ஃப்ளேவனாய்ட்ஸ், மற்றும் ஆல்கலாய்ட்ஸ் ஆகியன அடங்கியுள்ளன. இவற்றில் “டேனின்ஸ்” என்னும் சத்துப் பொருள் வற்ற வைக்கும் தன்மை உடையது. இதனால் வயிற்றுப் போக்கு தவிர்க்கப்படுவதோடு குணப்படுத்தவும் இயலுகிறது.