திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

எந்த கீரையில் என்னென்ன சத்துக்கள் உள்ளது தெரியுமா...?

மணத்தக்காளி கீரை: அல்சர் வியாதியை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. குடலை தூய்மைப்படுத்தி பலம் கொடுக்கும் கர்ப்பப்பை குறைபாட்டை நீக்கி ஆரோக்கியத்தை தரும். குடற்புழுவை அழிக்கும்.
முருங்கைக்கீரை: இரத்தத்தை தூய்மை படுத்தும் இரும்புச் சத்து கொண்டது. உடல் வெப்பத்தை தணிக்கும், மலச்சிக்கலை தீர்க்கும் வல்லமை  இதற்கு உண்டு. பெண்களுக்கு மாதவிடாய் தருவாயில் வலி இருக்கும்பொழுது முருங்கைக்கீரை சாற்றில் சிறிது கல் உப்பு சேர்த்து  சாப்பிட்டால் வலி நிற்கும். வயிற்றுப்புண்களை ஆற்றும் குணமுடையது.
 
அகத்திக்கீரை: இந்த கீரைதான் உடலில் ஏற்படும் வெப்பத்தை குறைக்கும். மேலும் இரத்தம், குடல் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும். குடற்புழுவை கொல்லும் பித்தத்தை தணிக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் ஆகியவற்றை போக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக உடலில்  எந்த வகையில் விஷம் ஏறினாலும் அதனை முறிக்கும் வல்லமை இதற்கு உண்டு.
 
பசலைக்கீரை: இந்த கீரை உடலுக்கு குளிர்ச்சியை தருவதில் சிறந்தது. இது உடலில் நீரை பெருக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க பயன்படும் வயிற்றுப்புண்களை குணப்படுத்துவதோடு கண்களுக்கு குளிர்ச்சியை தந்து நல்ல ஒளியைத் தரும்.
 
வெந்தயக்கீரை: வெந்தயக்கீரையில் உடலுக்கு தேவையான இரும்புச் சத்து உள்ளது. வயிற்றுப் புண்ணை ஆற்றுவதோடு கண்ணிற்கும் நல்லது. வயிற்றுப்போக்கு நேரத்தில் இதனை உட்கொண்டால் வயிற்றுப்போக்கு நின்று விடும்.
 
அரைக்கீரை: தேமல், சொறி போன்ற தோல் வியாதிகள் உள்ளவர்கள் இக்கீரையை தினமும் உட்கொண்டால் நாளடைவில் வியாதிகள்  குணமடையும்.
 
சிறுகீரை: உடல் தளர்ச்சியை போக்கும். மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும். குடலின் பலத்தை அதிகரிக்கும். உடலில் இருக்கும்  அதிகப்படியான பித்தத்தை குறைக்கும்.
 
புளிச்சக்கீரை: குடலினை சுத்தம் செய்து பலமாக்கும். இக்கீரையை வெங்காயத்துடன் வெந்தயமும் சேர்த்து மூன்று வேலையும் சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு நின்றுவிடும். இரத்த போக்கை கட்டுக்குள் வைக்கும்.