புதன், 13 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By

சரும பராமரிப்பில் மாதுளை பழச்சாற்றை எவ்வாறு பயன்படுத்துவது....?

சருமத்தின் ஆரோக்கியத்தைப் பரமரிக்கக்கூடிய ஊட்டச்சத்துகளில் மிகவும் பயனளிக்கக்கூடிய வைட்டமின் ‘ஈ’ மாதுளைப் பழங்களில் அதிக அளவில் காணப்படுகிறது. சருமப் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காகத் தோல் பராமரிப்பு பொருட்களில் மாதுளைப் பழத்தின் சாறு  சேர்க்கப்பட்டுள்ளது.
மாதுளை பழச்சாற்றில் காட்டனை தோய்த்து முகம் முழுவதும் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்வதின் மூலம் தோலில் உள்ள கரும்புள்ளிகள் குறையும். மேலும் மாதுளைபழச்சாறு கரும்புள்ளிகளைக் கட்டுப்படுதுகிற மிகச் சிறந்த டோனர் ஆகச் செயல்படுகிறது.
 
மாதுளை வடுக்களின் தோற்றத்தைக் குறைப்பதற்காகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திசுக்களை உருவாக்குகிறது. நீங்கள் பாதிக்கப்பட்ட  பகுதிகளில் மாதுளை பழச்சாற்றினைத் தேய்ப்பதன் மூலம் முகப்படுக்களை அகற்றலாம்.
வைட்டமின் சி, மாதுளைப் பழத்தில் அதிக அளவில் உள்ளது. மாதுளை வடுக்களின் தோற்றத்தைக் குறைப்பதற்காகப் பாதிக்கப்பட்ட  பகுதிகளில் திசுக்களை உருவாக்குகிறது. நீங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாதுளை பழச்சாற்றினைத் தேய்ப்பதன் மூலம் முகப்படுக்களை  அகற்றலாம்.
 
உடற்சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயைப் போக்குவதற்கு மாதுளம் பழத்தின் விதைகளை அரைத்து உடல் தேய்ப்பானாகப்   பயன்பத்தலாம்.
 
மாதுளம் பழம் உலர்ந்த மற்றும் சீரற்ற தோலுக்கு அழகு சேர்க்கிறது. மேலும் சருமத்திலிருந்து ஈரப்பதம் வெளியேறுவதைத் தடுத்து ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.