உணவு செரியாமை போன்ற பிரச்சனைக்கு அற்புத நிவாரணம் தரும் இஞ்சி...!!

பொதுவாக அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது, வெள்ளைப்பூண்டும், இஞ்சியும் அதிக அளவில் சேர்த்து சமைப்பார்கள். இஞ்சியின் மருத்துவக் குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் செரித்தலை துரிதப்படுத்துதல் ஆகும்.
இஞ்சி மலச்சிக்கல் ஏற்படுவதை தடுத்து, செரித்தலை சீராக்கி வியிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது. பெண்களில் கருப்பை, மாதவிலக்கு நேரங்களில் அடி வயிற்றில் ஏற்படும் வலிகளுக்கு நல்ல மருந்தாக உள்ளது.
 
எந்த பானமாக இருந்தாலும் அதனுடன் இஞ்சியை சேர்த்து குடித்தால் அவை. 40 வயதுக்கு பின் ஏற்படும் மூச்சை பிடித்துக்கொள்வது போன்ற  பிரச்சனைஅகள் ஏற்படாமல் தடுக்கும்.
 
உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான நோய்களுக்கு  காரணமாக இருக்கும் மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.
 
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சியை நன்றாக சுட்டு, அதை நசுக்கி உடம்பில் தேய்க்க  பித்த, கப நோய்கள் தீரும்.
 
இஞ்சி சாறில் தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை கூடும்.
 
இஞ்சி சாறுடன் வெங்காய சாறும் கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும். இஞ்சியானது இதய ரத்த குழாய்களின் அடைப்பு உண்டாகாமல் தடுக்கும். 
 
தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்துக் குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும்.  சேர்த்த கொழுப்பையும் கரைக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :