திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

கொய்யாப் பழத்தில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்...!!

கொய்யாப் பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்த அளவினை சீராக வைக்க உதவுகின்றது. நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்த  உணவில் அதிக அளவில் பழங்களை சேர்த்து கொள்ள வேண்டும். ஆரஞ்சுப் பழத்தில் உள்ள வைட்டமின் சி அளவினைவிட நான்கு மடங்கு  அதிக அளவு கொய்யாப் பழம் கொண்டுள்ளது.
கொய்யாப் பழம் மூளையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. அறிவாற்றல் செயல்பாட்டினையும் தூண்டுகிறது. மேலும் கொய்யாப் பழம் நரம்புகளுக்கு ஓய்வினை அளிக்கிறது.
 
கொய்யாவானது மிகுதியான நார்ச்சத்தினையும் குறைவான இரத்த சர்க்கரையையும் இயற்கையாகவே கொண்டுள்ளது. இதன்மூலம் இரத்த  அழுத்தம் குறைக்கப்படுகிறது.
 
கொய்யாப் பழம் சாப்பிடுவதனால் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறைவதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் இவற்றில் லைக்கோபீனே நிறைந்துள்ளதால் மார்பகப் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகிறது.
கொய்யா பழத்தில் வைட்டமின் ‘ஏ’ இருப்பதால் ஆரோக்கியமான பார்வைத் திறனை மேம்படுத்தும். கொய்யாப் பழத்தில் வைட்டமின் ‘பி9’ அல்லது போலிக் அமிலம் நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் ‘பி9’ மற்றும் போலிக் அமிலம் கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவர்களால்  பரிந்துரைக்கப்படுகிறது.
 
கொய்யா இலைகளிலிருந்து எடுக்கப்படும் சாறு பல்வலி, வீங்கிய ஈறுகள் மற்றும் வாய்வழிப் புண்கள் ஆகியவற்றைக் குணப்படுத்துவதாக  அறியப்படுகிறது. 
 
கொய்யாப் பழச்சாறு இரத்த சர்க்கரையின் ஏற்ற இறக்கத்தினை அதிக அளவிலிருந்து குறைந்த அளவிற்கு குறைக்க உதவுகிறது. இதன்மூலம் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு பெருமளவில் குறைக்கப்படுகிறது.