வியாழன், 23 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 5 ஜூன் 2023 (10:56 IST)

தர்பூசணியில் இதை கலந்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

watermelon
வெயில் காலத்தில் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்குவதில் தர்பூசணி பழம் இன்றியமையாதது. தர்பூசணி சாறுடன் சில பொருட்களை கலந்து அருந்தினால் கூடுதலாக சில பலன்களை அளிக்கிறது. அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.


  • தர்பூசணியில் அதிக அளவு விட்டமின் சி, நார்ச்சத்து, நீர்ச்சத்து ஆகியவை உள்ளது. இதனால் வெயில் காலங்களில் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதில் தர்பூசணி முக்கிய பங்கு வகிக்கிறது.
  • தர்பூசணி பழச்சாறுடன் இளநீர் கலந்து அருந்தினால் வெயிலால் ஏற்படும் சூடு தணியும். இரவில் உடல் சூடு காரணமாக ஏற்படும் சிறுநீர் எரிச்சல் போன்றவை வராது
  • தர்பூசணி பழத்துண்டுகளை பதநீரில் போட்டு சாப்பிட்டால் வயிற்று வலி தீரும். மேலும் வயிற்று எரிச்சல் மற்றும் செரிமான பிரச்சினைகளும் சரியாகும்
  • தர்பூசணி விதைகளை அரைத்து வெந்நீரில் போட்டு குடித்து வர சிறுநீர் கற்கள் கரையும். இதன்மூலம் சிறுநீரக பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.
  • தர்பூசணி பழச்சாறுடன் சீரகப்பொடி சேர்த்து சாப்பிட்டு வர நீர்த்தாரை எரிச்சல் சரியாகும்.
  • தொண்டை எரிச்சல், புண் மற்றும் தொண்டை வலி மறைய தர்பூசணி சாறுடன் பால் கலந்து சாப்பிடலாம்.
  • தர்பூசணி சாறுடன் நுங்கு கலந்து சாப்பிட்டு வர வெயில் கால வெக்கை, உடல்சூடு குறையும்.