அனைத்து பிரச்சினைகளையும் அகற்றும் அரை கீரையின் நன்மைகள்!
கீரை வகைகளில் குட்டையானதும் தடித்த தண்டுகளை உடையதுமான அரை கீரை பல வகை நன்மைகளுக்கு உடலுக்கு தரக்கூடியது. அதன் பயன்கள் குறித்து காண்போம்.
-
அரை கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.
-
அரை கீரையில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மெலிந்த உடல் பலம் பெறும், எடை கூடும்.
-
அரை கீரை சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட வாயு தொல்லை நீங்குவதுடன் வயிறு பொறுமலும் சரியாகும்.
-
பிரசவமான பெண்களுக்கு உடல் பலத்திற்கும், தாய் பால் அதிகம் சுரக்கவும் அரை கீரை நல்ல உணவாகும்.
-
கண் பார்வை மங்குதல், கண் குத்தல் உள்ளிட்ட கண் சார்ந்த பிரச்சினைகள் அரை கீரை சாப்பிடுவதால் குணமாகும்.
-
அரை கீரை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களில் தேங்கும் கற்களை கரைத்து நன்மை பயக்கும்.
-
மஞ்சள் காமாலை பாதிப்பு உள்ளவர்கள் பத்திய உணவில் மஞ்சள் சேர்க்காத அரை கீரை உணவை எடுத்துக் கொள்ளலாம்.