செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 4 ஜூன் 2023 (08:49 IST)

ஏலக்காயின் இணையற்ற மருத்துவ பயன்கள்!

ஏலக்காய் ஒரு முக்கியமான மூலிகைப் பொருள். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அவை என்னவென்று தெரிந்து கொள்வோம்.


  • உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், இரவில் ஏலக்காய் சாப்பிட்டு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரைக் குடித்து வந்தால் எடை மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.
  • ஏலக்காயை உட்கொள்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவது போன்றவற்றை தடுக்கிறது.
  • ஏலக்காய் இரத்த அழுத்தத்தைக் குறைத்து சுவாசத்தை மேம்படுத்துகிறது. ஆஸ்துமா, சுவாச பிரச்சினைகளில் இருந்து ஏலக்காய் நிவாரணம் அளிக்கிறது.
  • ஏலக்காயை உட்கொள்வதால் தூக்கமின்மை பிரச்சனையை குறைப்பது மட்டுமின்றி தூங்கும் போது குறட்டை விடுவதும் சரியாகிறது.
  • ஏலக்காய் சிறுநீரகத்தில் உள்ள அசுத்தங்களை அகற்ற உதவுகிறது மற்றும் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது.
  • கரும்புள்ளிகளை குறைத்து சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க ஏலக்காய் உதவுகிறது.
  • ஏலக்காயை சாப்பிட்டு வந்தால், முடி உதிர்தல், உடைதல் போன்ற பிரச்சனைகள் குறைந்து, முடி வலுவடையும்.