1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : புதன், 20 ஏப்ரல் 2022 (18:02 IST)

எளிதாக கிடைக்கும் புதினாவில் உள்ள மருத்துவகுணங்கள் என்ன...?

mint 1
புதினா மலச்சிக்கலை நீக்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது.


புதினாவை நீர் சேர்க்காமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால் தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும். ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது.

புதினாக் கீரையானது மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் புதினா சாற்றை முகத்தில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும். சிறுநீர் கழிப்பதில் எரிச்சல் உள்ளவர்கள் புதினாவை குடிநீர் போல தயார் செய்து குடித்து வர எரிச்சல் குறையும்.

mint

புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்துக் குடித்தால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். புதினாக்கீரை துவையலை வயிற்றுப்போக்கு ஏற்படும் சமயங்களில் சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வாந்தி வருவது இயல்பானது. அந்த நேரங்களில் புதினாக்கீரையை சாப்பிட்டால் கர்ப்பிணிகளின் அதிகப்படியான வாந்தி நிற்கும்.