1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Modified: புதன், 20 ஏப்ரல் 2022 (17:47 IST)

வழுக்கை தலையிலும் முடி வளர வேண்டுமா...?

Small onions
சின்ன வெங்காயத்தில் சல்பர் தான் முடி வளரவும் காரணமாக உள்ளது. சிறிய வெங்காயத்தை அரைத்து முடியின் மயிர்க்கால்களில் பூசி வந்தாலே போதும், முடிவளர ஆரம்பிக்கும். வாரத்திற்கு இரு நாட்களுக்கு மட்டும் இதனை செய்யலாம்.


5 அல்லது 6 வெங்காயத்தை எடுத்துக் கொண்டு அதை மைபோல் அரைத்து வைக்கவும். அரைத்த வெங்காயத்தை முடியின் வேர்க்கால்களில் படும்படியும். வழுக்கை விழுந்த இடத்திலும் தேய்க்க வேண்டும். உலர்ந்தவுடன் சீயக்காய் பவுடரில் கஞ்சி கலந்து தலைக்கு குளிக்கவும்.

இதனால் முடியில் ஈரப்பசை இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு நாட்கள் என்று பயன்படுத்திவர தலைமுடி வளர ஆரம்பிக்கும். ஆனால் இனிமேல் ஷாம்பூ மற்றும் ஹேர் ஜெல்களை பயன்படுத்தக் கூடாது. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய வற்றை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

தினமும் கண்டிப்பாக எண்ணெய் தடவவேண்டும். தலைமுடியில் தடவுவதை விட வேர்க்கால்களில் தடவ வேண்டும். இரவில் தூங்கு வதற்கு முன்னர் ஒரு தேக்கரண்டி எண்ணெய்யை எடுத்து மயிர்க் கால்களில் படும்படி மசாஜ் செய்து விடுங்கள். வழுக்கை தலையிலும் செய்தால் முடி வளர ஆரம்பிக்கும்.

வழுக்கையில் முடி வளரும் ஆனால் பலவீனமாக இருக்கும் ஒரு காற்றடித்தாலே பறந்து விடும். எனவே இந்த எண்ணெய் மற்றும் சின்ன வெங்காயத்தை பயன்படுத்துவதால் முடி நன்கு வளரும்.