1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Lotus stem full of various medicinal properties !!

பல்வேறு மருத்துவகுணங்கள் நிறைந்துள்ள தாமரை தண்டு !!

தாமரை தண்டு
தாமரை பூபோலவே அதன் தண்டுகளும் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து. தாமரை கிழங்குகள் என்று அறியப்படும் இதில் உடலுக்கு தேவையான கலோரிகள் அதிக அளவில் உள்ளன.


ஏராளமான சத்துக்கள், தனிமங்கள் மற்றும் விட்டமின்களான பி6, சி தாமரை கிழங்கில் நிறைந்துள்ளன. விட்டமின் சி தாமரை கிழங்கில் மிகுதியாக உள்ளது.

தாமரை தண்டுகளை சாப்பிடுவதால் வயிற்றிலும் ரத்தத்திலும் உள்ள வெப்பத்தை குறைக்கலாம். குறிப்பாக பெண்கள் தாமரைத் தண்டின் கணுக்களை சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் கருப்பையில் இருந்து ரத்தம் கொட்டுவதை இது கட்டுப்படுத்துகின்றது.

சிறுநீரிலும் மலத்திலும் ரத்தம் கலந்து வருவதும், ரத்த வாந்தியும் நிறுத்துவதற்கு தாமரைக் தண்டின் கணுக்களை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

Lotus stem

இதனுடன் உடலுக்கு தேவையான இரும்பு சத்து, கந்தகச் சத்து போன்றவைகளும் இதில் அடங்கியுள்ளன. பொதுவாக தாமரையை போலவே தாமரை கிழங்குகளும் கசப்பாக இருப்பதால், இதனை வேகவைத்து சூப்புகளில் சேர்த்து குடிக்கலாம்.

தாமரைக் கிழங்கு துண்டுகளுடன் வெள்ளைப் பூண்டு இஞ்சி மிளகாய் ஆகியவற்றைக் கலந்து எண்ணெய்யில் பொரித்தும் சாப்பிடலாம்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
வழுக்கை தலையிலும் முடி வளர வேண்டுமா...?