செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 20 ஏப்ரல் 2022 (16:16 IST)

சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க பெரிதும் பயன்படும் கற்றாழை ஜெல் !!

Aloe Vera Gel
கற்றாழை பலவிதமான தோல் நோய்களுக்கு மருந்துக்காக  பயன்படுகிறது.  வறண்ட சருமம், தோல்  நோய்கள், முடி பிரச்சனைகள், பொடுகு முதலிய பல பிரச்சனைகளுக்கு கற்றாழை பயன்படுகிறது.


கற்றாழை சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கிறது. அதிகமாக எண்ணெய் சருமம் கொண்டவருக்கும் கற்றாழை சாறு பயன்படும். அழகு சாதான பொருட்கள் பயன்படுத்தும் பெண்களுக்கு, தோல் வறளுவதை தடுக்க கற்றாழை பயன்படுகிறது.

கற்றாழையை தோலில் தேப்பதால் அது தோலில் உள்ள வறட்சியை நீக்கி தோலுக்கு குளிர்ச்சி அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஆண்களுக்கு  ஷேவிங்கினால் ஏற்படும் சிறிய வெட்டுக்காயங்களுக்கு கற்றாழை பயன்படுகிறது.

இது தோலில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைக்கிறது. கற்றாழை முகப்பருவைக் குறைக்கிறது. கற்றாழை சருமத்தில் பயன்படுத்துவதால் தோல் வயதான ஆரம்ப அறிகுறிகளைத் தடுக்கிறது. மேலும் இது வெயிலினால் ஏற்படும் வெப்பத்தை  குறைக்கும்.

 இது சருமத்திற்கு ஒரு பாதுகாப்பு அடுக்காக செயல்படுகிறது. இது சருமத்திற்கு  ஒரு நல்ல மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. கற்றாழை சருமத்தில் பயன்படுத்துவதால் புற ஊதா  கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.

கற்றாழை சருமத்தை மேம்படுத்தி சுருக்கங்களை தடுக்கும். இது தோல் பளபளப்பை மேம்படுத்துகிறது.